உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாடு தழுவிய போராட்டத்துக்கு கட்டுமான சங்கங்கள் ஆதரவு

நாடு தழுவிய போராட்டத்துக்கு கட்டுமான சங்கங்கள் ஆதரவு

கோவை; நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்தில், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பங்கேற்க, முடிவு செய்துள்ளனர்.மத்திய அரசானது, கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடவும், 44 தொழிலாளர் சட்டங்களை தொடர்ந்து அமல்படுத்த வலியுறுத்தியும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வலியுறுத்தியும் வரும், 9ம் தேதி தொழிற் சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து, பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.இந்நிலையில், கோவை மாவட்ட கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள, ஏ.ஐ.டி.யூ.சி., சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.அப்போது, 'வரும், 9ம் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் மாவட்ட கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கலந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து, கோவை, பெரியநாயக்கன்பாளையம் உட்பட ஆறு மையங்களில் நடக்கும் மறியல் போராட்டங்களிலும், தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும்' என்று முடிவு செய்யப்பட்டது.ஏ.ஐ.டி.யூ.சி., சங்க நிர்வாகி செல்வராஜ், எச்.எம்.எஸ்., சங்க மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி