நுகர்வோர் குறைதீர் ஆணைய விசாரணை நாட்கள் அதிகரிப்பு
கோவை; கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது. 500க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதை குறைக்கும் வகையில், ஜூன் முதல், கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையம் திறக்கப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது. கூடுதல் குறைதீர் ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடுதல் ஆணையத்தில், வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் விசாரணை நடைபெற்றது. இனி, வியாழக்கிழமையும் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு, 60 வழக்குகளின் கட்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.