உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானைகளால் தொடரும் சேதம்

யானைகளால் தொடரும் சேதம்

தொண்டாமுத்தூர்; மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் அடிக்கடி காட்டு யானை கூட்டம் வெளியேறி, விளைநிலங்களில் சேதப்படுத்தி வருகிறது.இந்த நிலையில் அய்யாசாமி கோவில் அருகே உள்ள மாணிக்கராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம், பயிர் மற்றும் மோட்டாரை சேதப்படுத்தியது. விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தீத்திபாளையத்தில், கடந்த சில மாதங்களாக, குட்டியுடன் வரும் 7 காட்டு யானைகள், விளை நிலங்களில் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. காட்டு யானைகள் ஊடுருவலை தடுக்க, வனத்துறையில் ரோந்து பணியில் ஈடுபடும் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ