உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தம்; கூட்டுறவு சங்கம், ரேஷன் பணியாளர்கள் பங்கேற்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தம்; கூட்டுறவு சங்கம், ரேஷன் பணியாளர்கள் பங்கேற்பு

கோவை மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி வெங்கடேசா காலனி மத்திய கூட்டுறவு வங்கி முன் கூட்டுறவுசங்க ரேஷன் கடை ஊழியர்கள் திரண்டனர். தலைவர் சண்முக சுந்தரம், செயலாளர் ஆனந்தன், துணை தலைவர் நாட்டுத்துரை ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.சங்க நிர்வாகிகள் கூறியதாவது:அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற ரேஷன் பொருட்களின் இருப்பு கூடுதல், குறைவு இருந்தால், பணியாளர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த அபாரத தொகையினை இருமடங்காக உயர்த்தியஉத்தரவை ரத்து செய்ய வேண்டும்.ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை தவிர, பிற பொருட்களையும் விற்பனை செய்ய அதிகாரிகள் வற்புறுத்த கூடாது. காலாவதியான பொருட்களை திரும்ப எடுத்துக்கொள்ள உரிய சுற்றறிக்கைகள் பிறப்பிக்க வேண்டும்.ரேஷன் கடை பணியாளர்கள், பல கி.மீ.,க்கு அப்பால் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சமீபத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள், சொந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்துக்கு செல்லும் நிலை உள்ளது.எனவே, புதிதாக விற்பனையாளர்கள் தேர்வு செய்வதற்கு முன், ஏற்கனவே பணியில் உள்ள பணியாளர்களை அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பணியிட மாறுதல் செய்து, அதன் பின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.போராட்டத்தில், 49 அலுவலகத்தை சேர்ந்த, 132 சங்க பணியாளர்கள், 132 பேர்; 151 ரேஷன் கடைகளில் உள்ள, 140 பேர் பங்கேற்றுள்ளனர். இதனால், கடைகள் மூடப்பட்டுள்ளன.இவ்வாறு, கூறினர்.

உடுமலை

உடுமலை, பெதப்பம்பட்டியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் தொழிற்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார்; 80 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.மளிகை பொருட்களை அதிகளவு வற்புறுத்தி விற்பனை செய்ய கட்டாயப்படுத்துதல்; நுகர்வோர் வாணிப கழக இருப்பு குடோனில் இருந்து, ரேஷன் கடைகளுக்கு பொருட்களை எடை குறைவாக வழங்கி விட்டு, அந்த குறைபாட்டுக்கு விற்பனையாளர்களிடம் இரு மடங்கு அபராதம் விதித்து வசூலிப்பதை கண்டித்தல் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி