தோட்டத்து வீடுகளில் தொடர் கண்காணிப்பு
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், சிறுமுகையில் தோட்டத்து வீடுகளில் தனியாக வசிப்போரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அண்மை காலமாக தோட்டத்து வீடுகளில், தனியாக வசிப்போரை குறிவைத்து கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம், சிறுமுகை போலீஸ் ஸ்டேஷன்கள் எல்லைப் பகுதிகளில் உள்ள தோட்டத்து வீடுகள், வயதானவர்கள் தனியாக வசிக்கும் வீடுகள், சுற்றிலும் வீடுகள் இல்லாமல் தனியாக இருக்கும் வீடுகள் போன்றவற்றை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''தனியாக இருக்கக்கூடிய வீடுகளுக்கு இரவு நேரங்களில் போலீசார் ரோந்து சென்று, தினமும் கண்காணித்து வருகின்றனர். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக 100க்கு அழைக்க வேண்டும். யாரும் அச்சப்பட வேண்டாம் என தனியாக வசிப்போருக்கு அறிவுரை கூறி வருகிறோம்,'' என்றனர்.-