கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
மழை வெள்ளத்தால் பேரிடர் ஏற்பட்டால், உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில், அவசர கால கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இம்மையத்தை, 0422 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம்.மொத்தம் 6 இணைப்புகள் உள்ளன. நேற்று மேட்டுப்பாளையம், வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு, சூலுார் போன்ற பகுதிகளிலிருந்து மரம் சாய்ந்ததாகவும், மின்கம்பங்கள் சாய்ந்ததாகவும் புகார்கள் வந்தன. அவை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, உடனுக்குடன் சரிசெய்யப்பட்டது. 24 மணி நேரமும் இயங்கும் இம்மையத்தில், 10 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.