உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு நிலத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியதால் சர்ச்சை

அரசு நிலத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியதால் சர்ச்சை

சூலுார், ; அரசு நிலத்தில் ஒரு தரப்பினர் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.சூலுார் தாலுகா அலுவலகத்துக்கு எதிரில், அரசுக்கு சொந்தமான, 10 சென்ட் நிலம் உள்ளது. இது தங்களுக்கு சொந்தமானது என, இரு தரப்புக்கு இடையில் பிரச்னை உள்ளது.இந்நிலையில், அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என, வருவாய்த்துறையினர் அறிவிப்பு பலகை வைத்திருந்தனர். இதற்கிடையில் அந்த இடத்தில் தொழுகை நடத்த ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால், மற்றொரு தரப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்கள் தரப்பு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோவை தெற்கு ஆர்.டி.ஓ., விடம் அவர்கள் முறையிட்டனர். இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !