உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொப்பரை ஏல தேதி மாற்றம்

கொப்பரை ஏல தேதி மாற்றம்

பொள்ளாச்சி: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏல தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொப்பரையை இருப்பு வைத்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், 19 மற்றும் 20 தேதிகளில் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை நாட்கள் என்பதால் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறாது. எனவே, விவசாயிகள் 26ம் தேதியன்று, விளை பொருட்களை ஏலத்திற்கு கொண்டுவரலாம் என, விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை