உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று கொப்பரை ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று கொப்பரை ஏலம்

சூலுார்; சூலுார் திருச்சி ரோட்டில், ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது. இங்கு வாரந்தோறும் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. இதுகுறித்து, சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வாணி அறிக்கை :மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக நடக்கும் ஏலத்தில்,சூலுார் வட்டார விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்று பயன் அடையலாம். ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள், ஆதார் அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முகப்பு பக்க நகல் கொண்டு வரவேண்டும். மேலும், விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை, இ - நாம் திட்டத்தின் வாயிலாக விற்று, விளை பொருட்களுக்கு உரிய விலையை பெற்று பயன் அடையலாம். மேலும் விபரங்களுக்கு, 98946 87827 என்ற எண்ணில் கண்காணிப்பாளரையும், 99769 63449 என்ற எண்ணில் மேற்பார்வையாளரையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை