உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 15.48 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

15.48 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 'இ-நாம்' முறையில், 15.48 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடந்தது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் தென்னை சாகுபடி பரப்பு அதிகம் உள்ளது. இந்தாண்டு, தென்னை சாகுபடியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், கடந்த மூன்று மாதங்களாக தேங்காய், கொப்பரை, தேங்காய் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.இந்நிலையில், பொள்ளாச்சி அடுத்துள்ள, வடக்கிபாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், ஏராளமான விவசாயிகள் 'இ-நாம்' திட்டம் வாயிலாக விளைபொருட்களை விற்பனை செய்தனர். இதில், 167.8 மெட்ரிக் டன் அளவு கொப்பரை, 15.48 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.முதல் தர கொப்பரை அதிகபட்ச விலையாக 240 ரூபாய் வரை விற்றது. இரண்டாம் தர கொப்பரை, 120 முதல் 200 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், 138 விவசாயிகள் மற்றும் 32 வியாபாரிகள் பயனடைந்துள்ளனர்.மேலும், தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளதால் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால், கொப்பரை வரத்தும் குறைந்து, விலை அதிகரித்துள்ளது. இத்தகவலை, கிணத்துக்கடவு விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி