உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.63 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ரூ.63 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

நெகமம்; நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 63 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை விற்பனை நடந்தது.நெகமம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அதிக அளவு தென்னை சாகுபடி உள்ளது. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.தற்போது, விற்பனை கூடத்தில், முதல் தர கொப்பரை ஒரு கிலோ, 112 முதல் 137 ருபாய் வரை விற்பனை ஆனது. இரண்டாம் தர கொப்பரை கிலோ, 72 முதல் 87 ருபாய் வரை விற்பனை ஆனது. விற்பனை கூடத்தில், 1,217 கொப்பரை மூட்டைகள் (50 - கிலோ), 63 லட்சத்து 7 ஆயிரத்து, 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது.இதில், 11 விவசாயிகள் மற்றும் 3 வியாபாரிகள் பயனடைந்தனர். இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ