மேலும் செய்திகள்
ரூ.70 ஆயிரம் லஞ்சம்: மதுரையில் தாசில்தார் கைது
09-Sep-2025
கோவை,; லஞ்சம் பெற்ற வழக்கில், கோவை மாநகராட்சி ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை, சவுரிபாளையத்தை சேர்ந்த கார்த்திக் பிரபு என்பவருக்கு, செட்டிபாளையத்தில் வீட்டு மனை உள்ளது. காலியிட வரி செலுத்த, கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்தார். காலியிட வரி புத்தகம் பெறவதற்காக, தெற்கு மண்டல இளநிலை உதவியாளராக பணியாற்றிய, சுந்தராபுரம் காந்தி நகரை சேர்ந்த கோகிலாமணியை,61 சந்தித்தார். அவர் காலியிட வரி நிர்ணயித்து புத்தகம் கொடுப்பதற்கு, 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டார். கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் கார்த்திக் பிரபு புகார் அளித்தார். போலீசார் அறிவுரைப்படி, 2014, டிச., 21ல், அலுவலகத்துக்குச் சென்று பணத்தை கொடுத்தார். லஞ்ச பணம், 1,500 ரூபாயை, கோகிலாமணி வாங்கியபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி ஷர்மிளா, குற்றம் சாட்டப்பட்ட கோகிலாமணிக்கு, ஓராண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
09-Sep-2025