உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜூடோ போட்டியில் வெண்கலம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்

ஜூடோ போட்டியில் வெண்கலம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்

கோவை; மாநில அளவிலான ஜூடோ போட்டியில், கோட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர், வெண்கலம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புனித ஜான்ஸ் கல்லுாரியில், மாநில அளவிலான ஜூடோ போட்டி நடந்தது. பள்ளிகளுக்கு இடையே நடந்த இப்போட்டியில், மாநிலம் முழுவதும் இருந்து, 950க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இதில், கோட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் முபாரிஷ், 14 வயதுக்குட்பட்ட ஜூடோ போட்டியில்(50 கிலோ எடை பிரிவு) கலந்துகொண்டு, அபாரமாக விளையாடி, வெண்கல பதக்கம் வென்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவரை, பள்ளி தலைமையாசிரியர் தில்லை கோவிந்தன், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி