உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டேக்வாண்டோ போட்டியில் பதக்கங்கள் குவித்துள்ள மாநகராட்சி பள்ளி மாணவியர்

டேக்வாண்டோ போட்டியில் பதக்கங்கள் குவித்துள்ள மாநகராட்சி பள்ளி மாணவியர்

கோவை; மாநில அளவிலான 'டேக்வாண்டோ' போட்டியில் தங்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவி தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.ஆர்.எஸ்., புரம், எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 பயிலும் மாணவி அனன்யா சிங் கடந்த ஜூலை மாதம் திருச்சியில் நடந்த மாநில அளவிலான 'டேக்வாண்டோ' போட்டியில் பங்கேற்றார்.திறமையை வெளிப்படுத்திய அவர் தங்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். தொடர்ந்து, ஆக., மாதம் மஹாராஷ்டிராவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்ற அவர் கடின முயற்சிக்கு மத்தியில் பதக்க வாய்ப்பை பறிகொடுத்தார்.வெற்றி முனைப்புடன் தொடர் பயிற்சியில் ஈடுபட்டுவரும் இவரை, இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமமானது(எஸ்.ஜி.எப்.ஐ.,) மத்தியபிரதேசத்தில் வரும் டிச., 20 முதல், 24ம் தேதி வரை நடக்கும் தேசிய அளவிலான 'டேக்வாண்டோ' போட்டிக்கு தேர்வு செய்துள்ளது.இவருடன், 11ம் வகுப்பு மாணவி ஆதிபா, ஏழாம் வகுப்பு மாணவி சம்ருதவர்ஷினி ஆகியோரும் 'டேக்வாண்டோ' போட்டியில் தங்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் மூவரும் அடுத்தாண்டு ஜன., மாதம் சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.நடப்பு, 2024-25ம் கல்வியாண்டில், மண்டலம், மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளில் இப்பள்ளி மாணவியர், 122 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ