நீதிமன்ற வழக்கு வாதப்போட்டி
வடவள்ளி: தமிழ்நாடு மாநில மாதிரி நீதிமன்ற குழு மற்றும் கோவை அரசு சட்டக் கல்லூரி சார்பில், சட்டக் கல்லூரி மாணவர்களுக்காக, மாநில அளவிலான ஆங்கில மாதிரி நீதிமன்ற வழக்கு வாத போட்டி, கோவை சட்டக் கல்லூரியில் நடந்தது. இப்போட்டியில், தமிழகத்தில் உள்ள 14 சட்டக்கல்லூரிகளின் மாணவர்கள் பங்கு பெற்றனர். இதன் நிறைவு விழாவில், கோவை அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் கோவை மாவட்ட வருமான வரி துறையின் முதன்மை இயக்குனர் அருண் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.