மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து 2 பசு மாடுகள் பலி
19-Oct-2025
மேட்டுப்பாளையம்: காரமடை அருக மாதப்பனுாரில் ஸ்ரீ பகவத் ராமானுஜர் கோ ரக்ஷண சாலா என்னும் கோசாலை உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட பசுக்கள், காளைகள், கன்றுகள் சேவை மனப்பான்மையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. பராமரிப்பாளர் சடகோப ராமனுஜ தாசன் கூறியதாவது:- இந்த கோசாலையை நிறு வியவர் மேட்டுப்பாளையம் ரோட்டேரியன் மதன்குமார். கால்நடைகளின் வயதான காலத்தில் விவசாயிகளால் பராமரிக்க முடியாமல், சிலர் அடிமாடுக்கு கொடுத்து விடுவார்கள். சிலர் கொடுக்க மனம் இல்லாமல் எங்கள் கோசாலையில் விட்டு செல்கின்றனர். அதே போல் நோய்வாய்பட்டுள்ள பசுக்கள், பரா மரிக்க ஆள் இல்லாமல் உள்ள பசுக்கள் தன்னார்வலர்களால் மீட்கப்பட்டு கொண்டு வரப்படுகின்றன. பசுக்களுக்கு சேவை செய்வதால் மன நிம்மதி கிடைக்கிறது. தன்னார்வலர்களின் உதவியுடன் கோசாலை இயங்கி வருகிறது. இங்குள்ள ப சுக்கள் இறக்கும் வரை அதற்கு எங்களது அன்பை கொடுப்போம். ஆதரவற்ற பசுக்களை கோசாலையில் கொண்டு வந்து விடலாம். தொடர்புக்கு: 63838 68448. இவ்வாறு அவர் கூறினார்.
19-Oct-2025