உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரேயான்ஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி  தொலைநோக்கு பார்வையில் தரமான கல்வி

கிரேயான்ஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி  தொலைநோக்கு பார்வையில் தரமான கல்வி

கோவை இடிகரையில் அமைந்துள்ள கிரேயான்ஸ் சி.பி.எஸ்.இ., பப்ளிக் பள்ளி தொலைநோக்கு பார்வை மற்றும் சிறந்த மனிதர்களை சமூகத்திற்கு கொடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. பள்ளி தலைவர் தினேஷ்குமார் கூறியதாவது: கிரேயான்ஸ் பள்ளியில் கற்றலின் முழுப்பொறுப்பையும் நாங்களே எடுத்துக்கொள்கிறோம். தொலைநோக்கு பார்வையில் சவால்களை எதிர்கொள்ளும் அனைத்து திறன்களுடன், சமூக பொறுப்புள்ள மாணவர்களை உருவாக்கும் நோக்கில் பள்ளி செயல்பாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அனுபவம் மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தனித்திறன் மேம்பாடு, கலை மற்றும் விளையாட்டு பயிற்சி, தற்காப்பு கலை அனைத்திற்கும் பிரத்யேக கவனம் செலுத்தப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், கோடிங் மற்றும் ரோபோட்டிக்ஸ் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கு ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நீட் மற்றும் ஜே.இ.இ., க்கான அடிப்படைப் பயிற்சி வகுப்புகளும், முதன்மைப் பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகின்றன.உண்மையான சமூக முன்னேற்றம் என்பது வகுப்பறையிலிருந்தே துவங்குகிறது. அதற்கான கல்வி சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளோம். மாணவர்கள் மட்டுமல்ல, வளர்ச்சி மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பள்ளி வாகனங்கள் சாலை பாதுகாப்பு பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள், பெண் உதவியாளர்களுடன் கோவை முழுவதும் இயங்குகிறது. 5 கி.மீ.. வரையுள்ள மாணவர்கள் பள்ளி வாகன வசதியை கட்டணம் இன்றி பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும், கால்பந்து, கிரிக்கெட் போட்டிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தற்போது கே.ஜி. வகுப்புகளுக்கான விஜயதசமி அட்மிஷன் நடைபெறுகிறது மேலும் விஜயதசமியன்று 1 முதல் பிளஸ்2 வரையுள்ள வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டுக்கான முன் பதிவும் நடைபெறுகிறது. அட்மிஷன் குறித்த தகவல்களுக்கு 9965411155 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ