உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் ஒளியில் கிரிக்கெட் போட்டி

மின் ஒளியில் கிரிக்கெட் போட்டி

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் மின் ஒளியில் நடந்த கிரிக்கெட் போட்டியில், ஒய்.பி.சி.சி., அணி வெற்றி பெற்றது. மேட்டுப்பாளையம் குமரன் கலை அறிவியல் கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான மின் ஒளி கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. இதில், 14, 17, 19 வயதுடையோருக்கு என மூன்று பிரிவாக போட்டிகள் நடந்தன. 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளர் சுரேஷ்குமார், மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கினர். 19 வயது பிரிவில் ஒய்.பி.சி.சி., அணியும், 17 வயது பிரிவில் கிங் ஆப் 11ஸ் அணியும், 14 வயது பிரிவில் ஆலங்கொம்பு ஏ.ஒய்.கே.சி.சி., அணியும் முதலிடம் பெற்றன. 19 வயது பிரிவில் ஒய்.பி.சி.சி., அணியை சேர்ந்த சசிதர் மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தை பெற்றார். அதேபோன்று, 17 வயது பிரிவில் சஞ்சையும், 14 வயது பிரிவில் ஆலங்கொம்பு அணியைச் சேர்ந்த கவி சரண் ஆகியோர் மேன் ஆப் தி மேட்ச் பட்டம் பெற்றனர். விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை குமரன் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். கல்லூரி முதல்வர் சுகுணா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி