கிரிக்கெட் போட்டிகள் ரைசிங் ஸ்டார் முதலிடம்
கோவை; பொங்கல் விழாவை முன்னிட்டு, நடந்த கிரிக்கெட் போட்டியில், காளம்பாளையம் ரைசிங் ஸ்டார் அணி முதலிடம் பிடித்தது.தென்கரை மக்கள் பொதுநலச்சங்கத்தின், 50வது ஆண்டு பொங்கல் பொன்விழா - 2025 ஐ முன்னிட்டு, கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் பல்வேறு அணிகள் மோதின. இறுதியில் காளம்பாளையம் ரைசிங் ஸ்டார் அணி முதலிடம் பிடித்தது. ஆறுமுகக்கவுண்டனுார் ஏ.ஜி., அணி இரண்டாவது இடத்தை பிடித்தது.போட்டிகளை, சதாசிவம் துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு, பேரூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முருகன் பரிசுகளை வழங்கினார். சங்கத்தின் தலைவர் கிருஷ்ணசாமி, செயலாளர் சிவபிரகாஷ், பொருளாளர் துரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.