மேலும் செய்திகள்
டூவீலர் மீது லாரி மோதல்: பெண் எஸ்.ஐ. படுகாயம்
10-Nov-2026
கிரைம் கார்னர்: சென்னை
25-Oct-2026
ஸ்கூட்டர் மீது கார் மோதல்; இளைஞர் பலிவெள்ளலுார் : பட்டணம், அம்மன் நகர் எக்ஸ்டென்ஷனை சேர்ந்தவர் பிரதாப்குமார், 28. நேற்று முன்தினம், சிங்காநல்லுார் – வெள்ளலுார் ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் அதிவேகமாக வந்த கார் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரதாப்குமார் உயிரிழந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு(கிழக்கு) போலீசார் கார் டிரைவர் வெள்ளலுார் திருவாதிரை நகரை சேர்ந்த அரவிந்த், 33 மீது வழக்கு பதிந்தனர்.==பொது இடங்களில் மது அருந்தியதாக 30 பேர் கைதுகாட்டூர்: பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, நேற்று மாநகர எல்லைக்குட்பட்ட, 13 போலீஸ் ஸ்டேஷன்களில் பதியப்பட்ட 24 வழக்குகளில், 30 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சுங்கம் ரவுண்டானா அருகே மது விற்பனையில் ஈடுபட்ட பழைய சுங்கத்தை சேர்ந்த வெங்கடேசன், 51 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், மது விற்றதற்காக உக்கடம் போலீசார் சுண்டக்காமுத்துாரை சேர்ந்த கோகுல்ராஜ், 32 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.==பைக் திருட்டு; ஒருவர் கைதுசெல்வபுரம் : தேவேந்திர வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 45. தங்கப்பட்டறையில் பணிபுரிகிறார். இரு தினங்களுக்கு முன் பணிமுடிந்து வந்தவர் வீட்டின் முன் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். நள்ளிரவு பார்த்த போது, பைக்கை காணவில்லை. செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணையில், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் அப்சல், 22 பைக்கை திருடியது தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். 10 மாத குழந்தை மரணம்; போலீஸ் விசாரணை: வடவள்ளி: அய்யப்பன் கோயில் வீதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 24. கணவர் ராஜ்குமார். தம்பதிக்கு ராஜவேலு என்ற 10 மாதக்குழந்தை இருந்தான். குழந்தைக்கு நான்கு மாதங்களாக சளி இருந்தது. ஒரு வாரமாக தோல் அலர்ஜி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. இரு தினங்களுக்கு முன் கடும் சுவாச பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முதலுதவிக்கு பின் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிந்து விட்டதாக கூறினர். வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர். போலீஸ் சட்டையை பிடித்தவருக்கு சிறை: குறிச்சி: சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷனில், இரண்டாம் நிலை போலீஸ்காரராக பணிபுரிபவர் சஞ்ஜீவ்காந்தி. நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் தலைமையில் சுந்தராபுரம் காங்., அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குறிச்சி காந்திஜி ரோட்டை சேர்ந்த பூபதி, 37 என்பவர் அங்கு வந்தார். சஞ்சீவ்காந்தி உடன் குறிச்சி அரவான் கோயில் திருவிழா குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், பூபதி, சஞ்சீவ்காந்தியின் சட்டையை பிடித்து தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் பூபதியை பிடித்தனர். வழக்கு பதிந்த சுந்தராபுரம் போலீசார் பூபதியை சிறையில் அடைத்தனர். குடியிருந்தவருக்கு கத்தி குத்து; வீட்டு ஓனர் கைது சிங்காநல்லூர்: காஞ்சிபுரம் ஏகாம்பரபுரத்தை சேர்ந்தவர் விஜய், 22. தனது நண்பர்கள் ரியாஸ், முகமது ஹாஜி, ஜாபர் ஆகியோருடன் சிங்காநல்லுார் அஸ்தாந்திர நாயக்கர் வீதியில் வசந்தகுமார், 24 என்பவரது வீட்டில் குடியிருந்தார். அக். மாதம் வாடகை தராததால், வசந்தகுமார் விஜயின் பைக்கை எடுத்துச் சென்றார்.சில தினங்களுக்கு முன் வீட்டுக்கு வந்த வசந்தகுமார், விஜய் மற்றும் அவரது நண்பர்களை தகாத வார்த்தைகளால், திட்டினார். இதுகுறித்து கேட்ட போது, அவரை வசந்தகுமார் தாக்கி, கத்தியால் குத்தினார். புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் வசந்தகுமாரை சிறையில் அடைத்தனர்.
10-Nov-2026
25-Oct-2026