உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கஞ்சா விற்பனை; இருவருக்கு சிறைராமநாதபுரம் : சுங்கம் பைபாஸ் ரோடு கருப்பராயன் கோயில் அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சோதனையிட்டனர். சோதனையில், அங்கிருந்த இருவரிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் கரும்புக்கடை பைசல், 36, ராமநாதபுரம் அய்யப்பன், 39 எனத் தெரிந்தது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து 2.500 கிலோ கஞ்சா, ரூ.6,600, ஒரு எடை மிஷின், 50 பாலித்தீன் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ==பெட்டி கடையில் புகையிலை பறிமுதல்இருகூர் : சிங்காநல்லுார் போலீசார் இருகூரில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறிந்தனர். அங்கிருந்து 7.710 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருகூரில் தங்கியுள்ள புதுக்கோட்டை ஆவுடையார்கோயில், திருவேங்கடம், 27 என்பவரை கைது செய்தனர்.இதேபோல், சுந்தராபுரம் போலீசார் ஈச்சனாரி – செட்டிபாளையம் ரோட்டில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற ராமநாதபுரம் ஆதனுாரை சேர்ந்த சத்யபிரகாஷ், 25 என்பவரை கைது செய்தனர். தப்பிய நிதின் என்பவரை தேடி வருகின்றனர். 1.281 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.==லாட்டரி விற்ற 2 பேர் சிக்கினர்சாய்பாபா காலனி : தடாகம் ரோடு மருதக்கோனார் வீதியில் லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்று சோதனை நடத்திய போலீசார் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கோவில்மேடு திலகர் வீதியை சேர்ந்த சந்திரசேகர், 39, கணுவாய் வீராசாமி, 74 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கேரள மாநில லாட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.==பொது இடங்களில் குடித்த 12 பேர் கைதுகோவை : பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, நேற்று மாநகர எல்லைக்குட்பட்ட, 7 போலீஸ் ஸ்டேஷன்களில் பதியப்பட்ட 11 வழக்குகளில், 12 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !