உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பஸ் மோதி ஒருவர் பலி

அரசு பஸ் மோதி ஒருவர் பலி

உக்கடம்: உக்கடம் பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ் மோதியதில் செட்டிபாளையத்தை சேர்ந்த விஷ்வநாதன், 52 என்பவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காலை உயிரிழந்தார். அரசு பஸ் ஓட்டுநர் வால்பாறை தம்பன் மீது வழக்கு பதிவு செய்து, போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர். போதைப்பொருள் விற்றவர்கள் கைதுஉக்கடம்: உக்கடம் போலீசார் ரோந்து பணியின் போது சுங்கம் பைபாஸ் சாலையில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை செய்த அரியலுார் ராஜா, 37 என்பவரை கைது செய்தனர். மதுபாட்டில்கள் பதுக்கல்: 10 வழக்குகள் பதிவு மாநகர போலீசார் ரோந்து பணியின் போது, விதிமுறை மீறி மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தல், பொது இடத்தில் மது அருந்துதல் பிரிவில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, மாநகர் முழுவதும் 10 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை