தாயை கடித்த மகன்
ஆர்.எஸ்.புரம் : ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ஜெயந்தி, 45. மகன் ஹரிபிரசாத், 22. வேலைக்கு செல்லவில்லை. அனைத்து செலவுக்கும் தாயிடம் பணம் கேட்டு வந்தார். தனது மூன்று சிம்கார்டுகளுக்கு ரிசார்ஜ் செய்ய கூறியதால் தாய் கண்டித்தார். ஹரிபிரசாத் ஆத்திரத்தில் தாயின் கையை கடித்தார். தாய் அளித்த புகாரின் பேரில் மகன் கைது செய்யப்பட்டார். வேலைக்கு செல்லாமல் மொபைல் பயன்பாட்டில் மூழ்கி இருந்ததால், மனஅழுத்தத்தில் இதுபோன்று நடந்து இருக்கலாம் என போலீசார் கூறினர்.கட்சி நிர்வாகி கடத்தலா? சிங்காநல்லுார்: காங்., மாநகர் மாவட்ட நிர்வாகி தனசேகரன். காலை நடை பயிற்சியின் போது, இவரை அடையாளம் தெரியாத கும்பல் காரில் கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. போன், கார் சாவியை பறித்துக் கொண்டு சிங்காநல்லுார் பைபாஸ் ரோட்டில் இறக்கி விடப்பட்ட அவரை, அவ்வழியாக வந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.போக்சோவில் ஒருவன் கைது: கோவை, காரமடையைச் சேர்ந்தவன் பத்ரசாமி, 62; கூலித் தொழிலாளி. தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தார். பயந்துபோன சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்தார். புகாரின்பேரில், மேட்டுப்பாளையம் மகளிர் போலீசார், பத்ரசாமியை போக்சோ வழக்கில் கைது செய்தனர். நீலம்பூர் டோல்கேட் பகுதியில், அதிகாலை, சூலூர் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பஸ்களில் சோதனை மேற்கொண்டனர். 20க்கும் மேற்பட்ட பஸ்களில் நடத்தப்பட்ட சோதனையில் குட்கா பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. சோதனை தொடரும் என, போலீசார் தெரிவித்தனர்.