உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தந்தையை கொல்ல முயற்சி

தந்தையை கொல்ல முயற்சி

வேலாண்டிபாளையம்: வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம், 59. அவர் மகன் கண்ணன், 32 என்பவருக்கும் குடும்ப பிரச்னை, திருமணம் குறித்து அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, கண்ணன் கையில் வைத்திருந்த சுத்தியால் தந்தையை தாக்கினார். காயமடைந்த சோமசுந்தரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். புகையிலை பொருட்கள் விற்பனை ஆர்.எஸ்.புரம் : ஆர்.எஸ்.புரம் போலீசார் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மேற்குவங்கத்தை சேர்ந்த அபாஸ் உதின், 36, சுக்கிரவார்பேட்டை அழகர்சாமி, 44 ஆகியோர் கைது செய்தனர். வடவள்ளி : புகையிலை பொருட்கள் விற்ற வீரகேளம் ஒயின் ஷாப் உரிமையாளர் சேகர், அஜீத்குமார், 26 ஆகியோரை கைது செய்தனர். செல்வபுரம் : தனியார் பள்ளி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த, செல்வபுரம் பரத், 39, போத்தனுார் பரமகுரு, 41 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 78 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே பகுதியில் ரமேஷ்குமார், 55 என்பவரையும் கைது செய்தனர். 60 போதை மாத்திரைகள் பறிமுதல் உக்கடம் : போலீசார் ரோந்து பணியின் போது, குனியமுத்துார் சகாப்த்தீன், 23 என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது போதைக்கு பயன்படுத்தும் 60 மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்தனர். 3 கிலோ கஞ்சா பறிமுதல் பீளமேடு : சரவணம்பட்டி போலீசார் இரவு ரோந்தில் சவுரிபாளையம் பகுதியில், நாகராஜன், 39 என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் 1.100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தார். போலீசார் கைது செய்தனர். துடியலுார் : சரவணம்பட்டி போலீசார், துடியலுார் ரோடு, கார்த்திக் நகரில் காலியிடத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்றவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, கஞ்சா மறைத்து வைத்திருந்த காளப்பட்டியை சேர்ந்த தர்மராஜ், 40 சவுரிபாளையத்தை சேர்ந்த முகிலன் 22 ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 2.300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோர்ட்டில் ஆஜராத எஸ்.எஸ்.ஐ., குனியமுத்தூர்: குனியமுத்துார் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., குமாரபிள்ளை. இவர் ஸ்டேஷனில் கொடுத்த புகாரில், கேரள மாநிலம், கண்ணுாரை சேர்ந்த மிராஜ், 38 மீது, 2011ல் கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. 2018 -ல் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. குமாரபிள்ளை நிபந்தனைகளை பின்பற்றாததுடன், கோர்ட்டில் வழக்கு வாய்தா நாளிலும் ஆஜராகவில்லை. இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மிராஜ் மீது வழக்கு பதியப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை