உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர் 

புகையிலை பொருட்கள் பறிமுதல்  ஆர்.எஸ்.புரம்:  போலீசார் ரோந்து பணியின் போது, டாஸ்மாக் அருகே  புகையிலை பொருட்கள் விற்ற ஆர்.ஜி. வீதி பாபு, புதுக்கோட்டை ராஜேந்திரனை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 3.80 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  *ரத்தினபுரி: அமரர் ஜீவானந்தம் சாலையில் புகையிலை விற்றதாக, புதுக்கோட்டை  தேவஜோதி, ரத்தினகுமாரை போலீசார் கைது செய்தனர்.  *ராமநாதபுரம்: புகையிலை பொருள் விற்றதாக, ராமநாதபுரம் மாவட்டம் கலைச்செல்வனை போலீசார் கைது செய்து 5.400 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். * கரும்புக்கடை: ஆத்துபாலம் சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த பீளமேடு ஏர்போர்ட் ரோட்டை சேர்ந்த பழனிசாமி, 42 காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 157 கிலோ இருந்தது சோதனையில் தெரிந்தது. அவற்றுடன் கார், ரூ.70 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு பழனிசாமி கைது செய்யப்பட்டார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை