உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்

வாகனம் திருட்டு:: கவுண்டம்பாளையம் தடாகம் ரோடு, சிவாஜி காலனி, சவுடாம்பிகா நகரில் வசிப்பவர் சக்தி. இவர் வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு போனது. கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். போன் பறித்த இருவர் கைது: நரசிம்மநாயக்கன்பாளையம் ஜோதி காலனியில் வசிப்பவர் சிவக்குமார், 64; தனியார் நிறுவன செக்யூரிட்டி. பஸ் ஸ்டாண்டில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் மொபைல் போனை பறித்துச் சென்றனர். பெ.நா.பாளையம் போலீசார் விசாரணையில், பூச்சியூர் அருள்ராஜ், 28, சூலூர் பாப்பம்பட்டி கண்ணன், 24, ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், மொபைல் போனை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி