உள்ளூர் செய்திகள்

கிரைம் செய்திகள்

பேன்சி கடையில் பணம் திருட்டு

காரமடை அருகே மாரியபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார், 44. இவர், மேட்டுப்பாளையம் - கோவை சாலையில், ரயில்வே மேம்பாலம் அருகே பேன்சி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு, இரவு வீட்டுக்கு சென்றார். நேற்று, காலை வந்து கடையை பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாபெட்டியில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம், திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின், உடனடியாக காரமடை போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்தார். இதன் பேரில் காரமடை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது, இரும்பு கம்பியால் பூட்டு உடைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், அருகில் உள்ள டைலர் கடையிலும், மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர் என கண்டறியப்பட்டது. இதுகுறித்து, காரமடை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.---தி.மு.க., பிளக்ஸ் கிழிப்புஅ.தி.மு.க.,வினர் இருவர் கைதுமேட்டுப்பாளையம் அடுத்துள்ள காட்டூர் ரயில்வே கேட் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் பிளக்ஸ் பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த அ.தி.மு.க., மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், 50, இளைஞரணி நிர்வாகி அக்பர், 28, உள்ளிட்ட இருவரும் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதாக கூறி அதனை கிழித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த, தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மல்லி சுப்பிரமணி, பிளக்ஸ் பேனர் கிழித்தது குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் கேள்வி கேட்டார். அப்போது, அவர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்து, தி.மு.க.,நிர்வாகி மல்லி, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார், நாசர், அக்பர் ஆகியோரை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் இருவரையும் மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை