உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரைம் செய்திகள்: தொழிலாளியை தாக்கிய மூவர் மீது வழக்கு

கிரைம் செய்திகள்: தொழிலாளியை தாக்கிய மூவர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய மூவர் மீது வழக்குஅன்னுார் அருகே குப்பேபாளையத்தில் தனியார் தொழிற்சாலையில் பன்னிமடையைச் சேர்ந்த கருப்பையா மகன் பத்மநாபன், 41. மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இதே தொழிற்சாலையில் ஆள் அனுப்புவது தொடர்பாக சக தொழிலாளர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, நிகோஸ் குமார், 28. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜின்ஜின் குமார், 29. வேணுகுமார், 21. ஆகிய மூவரும் சேர்ந்து பத்மநாபனை கம்பியால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த பத்மநாபன், அன்னூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். லாரி மோதி இளைஞர் பலி நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்த அப்பாஸ் மகன் அக்பர் அலி, 25. பூ வியாபாரி. அதே ஊரைச் சேர்ந்த சித்திக் மகன் ஷாஜித், 16. இருவரும் நேற்று முன்தினம் மதியம் மோட்டார் பைக்கில் அன்னூரில் இருந்து காரமடை சாலையில் சென்று கொண்டிருந்தனர். கெம்பநாயக்கன்பாளையம் அருகே செல்லும்போது அதே வழியில் சென்ற செப்டிக் டேங்க் லாரி, பைக் மீது மோதியது. இதில் அக்பர் அலியும், ஷாஜித்தும் காயமடைந்தனர். அக்பர் அலி கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அன்னூர் போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் ரஞ்சித் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை