உள்ளூர் செய்திகள்

கிரைம் செய்திகள்

லாரி மோதி ஒருவர் பலி

கோட்டைபாளையத்தைச் சேர்ந்த அசோகன் மகன் சந்தோஷ் குமார், 38. சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு மோட்டார் பைக்கில் அன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.குமாரபாளையம் பிரிவில் வேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ் குமார் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.எனினும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

வீடு புகுந்து திருடிய இருவர் கைது

சின்னதடாகம் அருகே வீடு புகுந்து திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.சின்னதடாகம் குட்டை வழியில் உள்ள வீட்டில் கடந்த பிப்., மாதம் திருட்டு நடந்தது. வீட்டின் முன்பக்க கதவை உடைத்த திருடர்கள், வீட்டுக்குள் பீரோவில் இருந்த, 3 கிராம் எடையுள்ள தங்க நகையை திருடி சென்றனர்.தடாகம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், திருட்டை நடத்தியது அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், 20, நிதீஷ் குமார், 22, என, தெரிய வந்தது. சின்னதடாகம் போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து, 3 கிராம் எடையுள்ள தங்க நகையை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ