உள்ளூர் செய்திகள்

கிரைம் செய்திகள்

தடுக்கி விழுந்து வாலிபர் பலி -

சூலுார் அடுத்த குரும்பபாளையத்தை சேர்ந்தவர் அசோக், 32. தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த, 22 ம் தேதி காலை வீட்டின் முன் நடந்து சென்ற போது, தடுக்கி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் உயிரிழந்தார். இதுகுறித்து சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

----தூங்கி கொண்டிருந்த சமையல்காரர் பலி

சிவகங்கை மாவட்டம் சாத்தன் கோட்டையை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம்,46. சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். நேற்று நள்ளிரவு,1:00 மணிக்கு தூங்கி கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சு வலியால் துடித்தார். உடன் இருந்தோர் சூலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் கூறினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கத்திக்குத்து; இருவர் கைது

சோமையனூரை சேர்ந்தவர் மதன்குமார், 25; பெயிண்டர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன்,45, ஒன்றாக பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். இருவரும் மது அருந்தும் போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் தனது நண்பர்களான நவீன்குமார்,31, சுரேஷ் ஆகியோருடன் மதன்குமாரை உடைந்த பாட்டில் மற்றும் கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த பெயிண்டர் மதன்குமார், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தடாகம் போலீசார் சரவணன், நவீன்குமார் ஆகியோரை கைது செய்தனர். சுரேஷை தேடி வருகின்றனர்.

முதியவரை கொலை செய்த தொழிலாளி கைது

மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் பாக்கு தோட்டம் வைத்திருப்பவர் அசோக் குமார், 48. இவர் தோட்டத்தில் கோவை புலியகுளத்தை சேர்ந்த பழனிச்சாமி, 60, சுமார் 20 வருடங்களாக தங்கி வேலை செய்து வருகிறார். இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு தோட்டத்தில் புகுந்த அடையாளம் தெரியாத 70 வயது முதியவர் ஒருவரை பழனிச்சாமி திருடன் என நினைத்து இரும்பு பைப்பால் தலையில் அடித்தார். இதில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் மற்றும் போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் முதியவர் கடந்த 2 மாதங்களாக மேட்டுப்பாளையம் பகுதியில் யாசகம் பெற்று வந்தவர் என தெரியவந்துள்ளது. முதியவரை கொலை செய்த குற்றத்திற்காக போலீசார் வழக்கு பதிந்து நேற்று பழனிச்சாமியை கைது செய்தனர்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ