உள்ளூர் செய்திகள்

கிரைம் செய்திகள்

போதைப் பொருள் விற்றவர் கைது

மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரபிதின், 54. இவர் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் போலீசார் கடையில் சோதனை செய்தனர். அப்போது 7.5 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப் போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரபிதினை கைது செய்த போலீசார், போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

----பாலியல் தொந்தரவு; இளைஞர் கைது

காரமடை அருகே பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.காரமடை அருகே தாயனூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ், 33. பட்டதாரி. இவரது வீட்டின் அருகே இரண்டு குழந்தைகளுடன் ஒரு பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணிற்கு அடிக்கடி பாலியல் ரீதியாக செய்கை வாயிலாக தொந்தரவு செய்து வந்தார். இதையடுத்து, அந்த பெண் காரமடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, தினேஷை கைது செய்தனர்.

பணம் கையாடல் செய்தவர் கைது

பைக் ஷோரூமில் பணம் கையாடல் செய்த ஊழியர் சிறையில் அடைக்கப்பட்டார்.திருப்பூரை சேர்ந்தவர் ரிஷிநாத், 30. சூலூரில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் ஊழியராக உள்ளார். இவர், நிறுவனத்துக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பெறும் பணத்தை, நிறுவனத்துக்கு செலுத்தாமல், 3 லட்சம் ரூபாயை, தன் வங்கி கணக்குக்கு அனுப்பி மோசடி செய்தது தணிக்கையில் தெரிந்தது. இதையடுத்து நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ரிஷிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை