கிரைம் தொடர்ச்சி
மாணவர்கள் தாக்கி, இன்ஜி., கல்லுாரி மாணவர் மரணம் இன்ஜி.,மூன்றாமாண்டு மாணவர் அமுதன் அம்பாள் நகரில் மாணவர்களுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அறையில் மயங்கி கிடந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விசாரித்த செட்டிபாளையம் போலீசார், ‘கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதன், சமையல்காரரை தாக்கியதால் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார். நண்பர்களின் அறையில் தங்கியவர், 9ம் தேதி அதிகாலை மாணவர்கள் சிலருடன் ஒத்தக்கால்மண்டபத்தில் 4ம் ஆண்டு மாணவர்கள் அறைக்கு சென்று போன்களை பறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். முகமூடி கழன்றதால் அடையாளம் தெரிந்தது. 10ம் தேதி கல்லுாரிக்கு அருகே நின்றிருந்த அமுதனை போன் பறிகொடுத்த மாணவர்கள் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கினர். மயங்கிய அமுதனை நண்பர்களின் அறையில் படுக்க வைத்து சென்றுள்ளனர்’ என்றனர். வழக்கு பதிந்த போலீசார், தீபக் உள்ளிட்ட ஐந்து மாணவர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.