உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதியோர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தன போலீசாரின் தொடர் நடவடிக்கை எதிரொலி

முதியோர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தன போலீசாரின் தொடர் நடவடிக்கை எதிரொலி

கோவை: போலீசாரின் தொடர் நடவடிக்கை காரணமாக முதியோர்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறைந்தன. கோவையின் மக்கள் தொ கை, 32 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுதவிர, தொழில், பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அண்டை மாவட்டத்தில் இருந்து வந்து செல்வோரின் எண்ணிக்கையும் அதிகம். இதன் காரணமாக, மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக தோட்டத்து வீடுகள், ஒதுக்குபுறமான இடங்களில் உள்ள வீடுகள், புறநகரில் மேம்பாடு அடைந்து வரும் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதைத்தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இது ஒருபுறம் இருக்க, வீடுகளில் தனியாக இருக்கும் முதியவர்களை குறிவைத்து சில கும்பல் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டன. இதையடுத்து வீடுகளில் தனியாக உள்ள முதியவர்கள் குறித்து கணக்கெடுத்து, அவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு தொடர்ந்து ரோந்து சென்று கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இதன் காரணமாக முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் குறைந்துள்ளன. கடந்த, 2023ம் ஆண்டில், கோவையில் முதியோருக்கு எதிரான, 24 வழக்குகளும், 2024ம் ஆண்டில் 15 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டிலும் குற்றங்கள் குறைந்துள்ளன. இதற்கு காரணம் போலீசாரின் தொடர் நடவடிக்கைகளே. போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில்,'பீட் போலீசார் ஒவ்வொரு மூத்த குடிமக்களையும் மாதம் ஒரு முறை சந்திப்பார். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கும் பணியை மேற்கொள்வர். போலீசார், மூத்த குடிமக்களுக்கு இடையேயான பிணைப்பை அதிகரிக்க ஒவ்வொரு முறையும் முயற்சி எடுக்கப்படுகிறது. போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் மூத்த குடிமக்களின் மொபைல்போன் எண்கள் சேமிக்கப்பட்டுள்ளன. குறிப்பட்ட கால இடைவெளியில் அவர்களை தொடர்பு கொண்டு விசாரிக்கப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !