உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆழியாறு அணையில் முதலை சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை 

ஆழியாறு அணையில் முதலை சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை 

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் முதலை நடமாட்டம் உள்ளது. சுற்றுலாப் பயணியர், அணைக்குள் இறங்க வேண்டாம், என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். இங்கு தேக்கி வைக்கப்படும் நீர், குடிநீருக்கும், ஒப்பந்தப்படி கேரளாவுக்கும், ஆழியாறு பாசனத்துக்கும் வினியோகிக்கப்படுகிறது. பருவமழை கை கொடுத்ததால் அணை நீர் நிரம்பி காட்சியளிப்பதால் ஆர்வமிகுதியில் சுற்றுலாப் பயணியர், அணைக்குள் இறங்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், ஆழியாறு அணை கரையோரம் முதலை அவ்வப்போது கரை ஒதுங்குகிறது. கடந்த சில நாட்களாக கரைப்பகுதிக்கு தொடர்ந்து முதலை வந்து செல்கிறது.பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணியர் ஆழியாறு அணைக்கு அதிகளவில் வருவதற்கு வாய்ப்புள்ளது. அவர்கள், ஆர்வமிகுதியில் அணைக்குள் சென்று 'செல்பி' எடுக்க முற்பட வாய்ப்புள்ளது.எனவே, அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி அணைக்குள் இறங்குவதை தடுக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், சுற்றுலா பயணியர், அணைக்குள் இறங்க வேண்டாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆழியாறு அணைப்பகுதியில் உள்ள முதலை அவ்வப்போது கரை ஒதுங்குவதாக தகவல் வருகிறது. ஏற்கனவே, ஆழியாறு அறிவுத்திருக்கோவில் அருகே அணைப்பகுதிக்குள் இறங்காமல் இருக்க, 'பென்சிங்' அமைக்கப்பட்டது.மேலும், அணைக்குள் செல்வதை தடுக்க இரு ஊழியர்களை நியமித்து, கண்காணிப்பு செய்யப்படுகிறது. தற்போது முதலை நடமாட்டம் உள்ளதால் கண்காணிப்பு தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை