ஏ.டி.எம்., மையம் திறப்பு வாடிக்கையாளர்கள் நிம்மதி; தினமலர்செய்தி எதிரொலி
வால்பாறைl 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், வால்பாறையில், பூட்டி கிடந்த வங்கி ஏ.டி.எம்., திறக்கப்பட்டது.வால்பாறை நகரில் யூனியன் வங்கி சார்பில், ஏ.டி.எம்., மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த மையம் பூட்டி இருந்தது. இதனால், எஸ்டேட் பகுதியிலிருந்து வால்பாறை நகருக்கு பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களும், வெளியூரிலிருந்து வந்துள்ள சுற்றுலா பயணியரும் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர்.இது குறித்து, கடந்த மாதம், 25ம் தேதி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் வங்கி ஏ.டி.எம்., மையம் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதனால், வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்தனர்.யூனியன் வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வங்கியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த, 'ஏ.டி.எம்.,' மிஷின் பழுதாகிவிட்டது. கடந்த மாதம் புதிய மிஷின் கொண்டுவரப்பட்டது. ஆனால், மிஷன் உரிய முறையில் செயல்பாட்டுக்கு கொண்டுவர டெக்னீசியன் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், சில நாட்கள் ஏ.டி.எம்., மையம் மூடப்பட்டது. தற்போது, புதிய மிஷன் பொருத்தப்பட்டு, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது,' என்றனர்.