சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்; ரோந்து போலீசார் செய்வதென்ன?
கோவை; காந்தி மாநகர் பகுதியில் உள்ள பூங்காவில், சந்தன மரங்கள் உட்பட பல்வேறு மரங்கள் உள்ளன. தினமும் பலர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை நடைபயிற்சி வந்தவர்கள், நான்கு சந்தன மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதை கண்டனர். மேலும், பல மரங்கள் ரம்பம் கொண்டு பாதி அறுக்கப்பட்ட நிலையில் இருப்பதை பார்த்தனர். சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் வழக்கு பதிந்து சந்தன மரங்களை வெட்டிக்கடத்தியவர்களை தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில், பதிவான காட்சிகள் மூலம் சந்தன மரங்களை வெட்டிக்கடத்திய நபர் களை, தேடி வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகமுள்ள காந்தி மாநகரின் பிரதான பகுதியில் உள்ள, பூங்காவில் இருந்து சந்தன மரங்களை மர்ம கும்பல் வெட்டிக்கடத்தியிருப்பது, போலீசார் இரவில் ரோந்து செல்வதை, கேள்விக்குரியதாக்குகிறது.