மேலும் செய்திகள்
தினசரி மார்க்கெட்டுக்கு பீட்ரூட் வரத்து இல்லை
09-Apr-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு அவரைக்காய் வரத்து குறைந்துள்ளது.கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை, ஏல முறையில் விற்பனை செய்கின்றனர்.நேற்று முன்தினம், மார்க்கெட்டில் தக்காளி (15 கிலோ பெட்டி)- 300, தேங்காய் ஒன்று - - 37, கத்தரிக்காய் கிலோ -- 17, முருங்கைக்காய் --- 25, வெண்டைக்காய் -- 35, முள்ளங்கி --- 17, வெள்ளரிக்காய் --- 15, பூசணிக்காய் --- 10, அரசாணிக்காய் --- 8, பாகற்காய் --- 35, புடலை --- 20, சுரைக்காய் --- 10, பீர்க்கங்காய் --- 30, பீட்ரூட் -- 17, அவரைக்காய் --- 70, பச்சை மிளகாய் ---- 20 ரூபாய்க்கு விற்பனை ஆனது.கடந்த வாரத்தை விட, தக்காளி (15 கிலோ பெட்டி) - 30, தேங்காய் ஒரு ரூபாய், முருங்கைக்காய் -- 10, புடலை மற்றும் பீட்ரூட் -- 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.இதேபோன்று, பீர்க்கங்காய் --- 7, வெள்ளரிக்காய், சுரைக்காய் மற்றும் அவரைக்காய் -- 5 ரூபாய் விலை குறைந்துள்ளது.வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில், சென்ற வாரம் இருந்த காய்கறிகள் வரத்தின் அளவே, இந்த வாரமும் உள்ளது. ஆனால் அவரைக்காய் வரத்து பாதியளவு மட்டுமே இருந்தது. இனி முகூர்த்த நாட்கள் அதிகம் இருப்பதால் காய்கறிகள் விலை உயர வாய்ப்புள்ளது,' என்றனர்.
09-Apr-2025