உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திறந்தவெளியில் கழிவுநீர் வெளியேற்றத்தால் பாதிப்பு

திறந்தவெளியில் கழிவுநீர் வெளியேற்றத்தால் பாதிப்பு

பொள்ளாச்சி; சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் வடிகால் வசதி ஏற்படுத்தாததால், வீடுகளில் இருந்து திறந்தவெளியில் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு, நாளுக்கு நாள், குடியிருப்புகள், கட்டுமானங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் பேரூராட்சி வார்டுகளில், போதுமான வடிகால் வசதிகள் இல்லை. இதனால் பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி, தெருக்கள் மற்றும் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.வீடுகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்ற, போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நிலத்தடியில் 'ரிங்' அமைத்தும், ஓடக்கல் அடுக்கியும், கழிவுநீர் கொண்டு செல்லப்படுகிறது.பல வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆங்காங்கே குழிகள் தோண்டி தேக்கி வைக்கப்படுகிறது. சில இடங்களில் கழிவு நீர் தெருவில் வெளியேற்றப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.உரிய முறையில் கால்வாய்களை அமைத்து குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வெளியேற, பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை