மேலும் செய்திகள்
ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
02-Apr-2025
வால்பாறை; வால்பாறையில் உள்ள, படகு இல்லத்தில் நடைமேடை சேதமடைந்ததால், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தமிழகத்தில், ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால், வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணியர் வரத்துவங்கி உள்ளனர்.இந்நிலையில், வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, படகு இல்லத்தில் சுற்றுலா பயணியர் நடந்து செல்லும் நடைபாதை சேதமடைந்துள்ளது. இதனால், படகுசவாரி செய்ய வரும் சுற்றுலா பயணியர் அவதிப்படுகின்றனர்.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மரப்பலகையினால் செய்யப்பட்ட நடைமேடை கூடுதல் 'வெயிட்' காரணமாக பழுதானது. விரைவில் நடைமேடை சரி செய்யப்படுவதோடு, படகு இல்லத்தில் தேங்கியிருக்கும், குப்பை உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்படும்,' என்றனர்.
02-Apr-2025