உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கனமழையால் பாதிப்பா... மாநகராட்சியை கூப்பிடுங்க!

கனமழையால் பாதிப்பா... மாநகராட்சியை கூப்பிடுங்க!

கோவை : வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக தகவல் தெரிவிக்க, தொடர்பு எண்களை, கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.கடந்த சில நாட்களாக, கோவை மாநகராட்சி பகுதியில் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும். பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வசதியாக, அவசர கால உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.அவசர கட்டுப்பாட்டு மைய எண்: 0422 - 230 2323வாட்ஸ் அப் எண்: 81900 00200வடக்கு மண்டலம் - 89259 75980மேற்கு மண்டலம் - 89259 75981மத்திய மண்டலம் - 89259 75982தெற்கு மண்டலம் - 90430 66114கிழக்கு மண்டலம் - 89258 40945வட கிழக்கு பருவ மழையால் பாதிப்பு ஏற்பட்டால், அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள், மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம், என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை