உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டார்லிங் ேஷாரூம் பொள்ளாச்சியில் திறப்பு

டார்லிங் ேஷாரூம் பொள்ளாச்சியில் திறப்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நியூஸ்கீ ம் ரோட்டில், 'டார்லிங் ேஷாரூம்' திறப்பு விழா நேற்று நடந்தது.'டார்லிங்' குழும நிர்வாக இயக்குனரும், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவருமான வெங்கடசுப்பு தலைமை வகித்தார். கிரேட் மவுண்ட் ரிசார்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சேதுபதி, ேஷாரூமை திறந்து வைத்தார். நகராட்சி தலைவர் சியாமளா குத்துவிளக்கு ஏற்றினார். பொள்ளாச்சி ஓட்டல் உரிமையாளர்கள சங்க தலைவர் காமராஜ், முதல் விற்பனையை துவக்கி வைத்தார். தொழில்வர்த்தக சபை தலைவர் முத்துசாமி முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார். எக்ஸ்போவன் குழுமங்கள் நிறுவனர் டாக்டர் மகேந்திரன், தமிழ்நாடு கோவில்கள் கூட்டமைப்பு மாநில பொருளாளர் சுந்தர் ராகவன், நாராயண குரு தமிழக பேரமைப்பு தலைவர் செந்தாமரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், பொள்ளாச்சி கவுரிகிருஷ்ணா ஓட்டல் நிர்வாகி செந்தில்குமார், விகான் டவர்ஸ் நந்தகுமார் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, 'டார்லிங்' குழும நிர்வாக இயக்குனர்கள் நவராஜ முருகன், அஜித்குமார், ஜேம்ஸ், முரளி, நவீன், பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். திறப்பு விழாவையொட்டி, வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், மொபைல்போன்கள், பர்னிச்சர்கள் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி