சுங்கம் மேம்பாலத்தில் சடலம்
கோவை; உக்கடம், சுங்கம் ரயில்வே மேம்பாலத்தில் நேற்று, கழுத்தில் சுருக்கு மாட்டிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலையில், ரயில்வே மேம்பாலம் உள்ளது. பாலத்தை ஒட்டி மின்சார கம்பிகள், கேபிள் ஒயர்கள் உள்ளன. நேற்று மாலை 4:30 மணியளவில், பாலத்தின் மீது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தொங்கிய நிலையில் இருந்தார். இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு, உயிரிழந்த நபர் யார், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என்பது குறித்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் 30 நிமிடங்கள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.