உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோர்ட் உத்தரவுப்படி அகவிலைப்படி; ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் மகிழ்ச்சி

கோர்ட் உத்தரவுப்படி அகவிலைப்படி; ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம்,; அகவிலைப்படி உயர்வை, கோர்ட் உத்தரவு படி, நிர்வாகம் வழங்கியதை அடுத்து, மேட்டுப்பாளையத்தில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் பொதுநல சங்கத்தினர், வெற்றிக் கூட்டம் நடத்தினர்.பணியிலிருந்து ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு, அகவிலைப்படி வழங்காமல், தமிழக அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்தது. இதை எதிர்த்து கோவை பேரவையின் சார்பிலும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மாதம் முதல் தவணையாக அகவிலைப்படி தொகை வழங்கப்பட்டது. இந்த மாதம் இரண்டாவது தவணையாக அகவிலைப்படி, 2016க்கு முன்பு ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, 48 சதவீதமும், அதன் பின் ஓய்வு பெற்றவர்களுக்கு, 16 சதவீதமும் அகவிலைப்படி, நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.இதை கொண்டாடும் வகையில், மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, மேட்டுப்பாளையம் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக பணியாளர்கள் பொது நல சங்கத்தினர் வெற்றிக் கூட்டம் நடத்தினர். சங்கத்தின் கவுரவத் தலைவர் சுப்ரமணியன், தலைவர் மனோகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். செயலாளர் பழனிசாமி, பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். பணியாளர்களின் அகவிலைப்படியை பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர்களுக்கும், உத்தரவு வழங்கிய நீதிபதிகளுக்கும் நன்றி தெரிவித்து பலர் பேசினர்.இந்த வெற்றிக்கூட்டத்தில் பெண் பணியாளர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ