கொலை மிரட்டல்; வாலிபர் கைது
வால்பாறை; போலீஸ் மற்றும் அரசு பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வால்பாறை டவுன் பகுதியை சேர்ந்த கனகராஜின் மகன் பிரவின், 33. இவர், நேற்று முன்தினம் வால்பாறை நகரில், காந்திசிலை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த அரசு பஸ்சை கார் உரசி விபத்துக்குள்ளானது. இதனால், ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அரசு பஸ் டிரைவர், விபத்து ஏற்படுத்திய பிரவினை காரை விட்டு கீழே இறங்குமாறு கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்தால் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக காரை விட்டு வெளியேற்றினார்.அப்போது, குடிபோதையில் இருந்த பிரவின் போலீஸ் மற்றும் அரசு பஸ் டிரைவரை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு பிரவினை கைது செய்தனர்.