உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டீஸ்வரர் கோவிலின் உப கோவில்களுக்கு ஆனியில் கும்பாபிேஷகம் நடத்த முடிவு

பட்டீஸ்வரர் கோவிலின் உப கோவில்களுக்கு ஆனியில் கும்பாபிேஷகம் நடத்த முடிவு

தொண்டாமுத்தூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், கடந்த மாதம் நடந்தது.பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உப கோவில்களாக, அதிமூர்க்கம்மன், அங்காளம்மன், மாசாணியம்மன், வடகயிலாயநாதர், தென்கயிலாயநாதர், அனுமந்தரேயசுவாமி, அரசம்பலவாணர், அழகிய திருச்சிற்றம்பலம், பட்டி விநாயகர், வரதராஜ பெருமாள் ஆகிய 10 கோவில்கள், பேரூரில் உள்ளது.இந்த உப கோவில்களில், 7 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, அங்காளம்மன், மாசாணியம்மன், அரசம்பலவாணர் ஆகிய மூன்று கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும்.இக்கோவில்களில், கும்பாபிஷேக பணி நடந்து வருகிறது. ஆனால், கும்பாபிஷேக தேதி முடிவு செய்யப்படாததால், பாலாலயம் செய்யப்படாமல் உள்ளது. பாலாலயம் செய்தால் மட்டுமே, கும்பாபிஷேகத்திற்கு தேவையான அனைத்து பணிகளும் மேற்கொள்ள முடியும். ஆனால், கும்பாபிஷேக நாள் அறிவிக்கப்படாமல், இழுபறி இருந்து வருகிறது. விரைவில், உப கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் (பொ) விமலா கூறுகையில், மூன்று உபகோவில்களுக்கும், ஆனி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ