மேலும் செய்திகள்
பெண்கள் ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப்
12-Jun-2025
கோவை; கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின்(சி.டி.எப்.ஏ.,), 2024-25ம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம், ரத்தினம் கல்லுாரியில் நடந்தது. சங்கத் தலைவர் மதன் செந்தில் தலைமையில் நடந்த கூட்டத்தில், தகுதியுள்ள, 35 உறுப்பினர்களில், 27 பேர் பங்கேற்றனர்.செயலாளர் அனில் குமார் ஆண்டு அறிக்கை மற்றும் பட்ஜெட் வாசித்தார். தொடர்ந்து, பள்ளிகளுக்கான கிட்டு டிராபி கால்பந்து போட்டி, ஜூலை மூன்றாவது வாரத்தில் நடத்தப்படும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.தமிழ்நாடு ஜூனியர் கால்பந்து அணிக்கான பயிற்சி முகாம், ரத்தினம் கல்லுாரி மைதானத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. சங்க துணை தலைவர்கள் பிரேம்நாத், ராஜா, பொருளாளர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
12-Jun-2025