உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு ; பள்ளிகளில் நடத்த முடிவு

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு ; பள்ளிகளில் நடத்த முடிவு

கோவை; நடப்பு கல்வியாண்டுக்கான (2025-2026) ஆசிரியர் நேரடி நியமனம், பணி நிரவல் மற்றும் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான நடவடிக்கைகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரிய விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல், இன்று (ஜூன் 30) வெளியிடப்படுகிறது. இதில் திருத்தங்கள், முறையீடுகள் உள்ளதா என்பதையும், காலிப் பணியிட விவரங்களையும் ஒருங்கிணைத்து, பட்டியல் வெளியாகிறது.மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு, ஜூலை 2ம் தேதி நடைபெறுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு, ஒன்றியம் மற்றும் கல்வி மாவட்ட அடிப்படையில், ஜூலை 3ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.வருவாய் மாவட்டத்திற்குள் இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 4ம் தேதி, ஒன்றியத்திற்குள் ஜூலை 5ம் தேதி நடைபெற உள்ளது.தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு, ஜூலை 19ம் தேதி தொடங்கி ஜூலை 23ம் தேதிக்குள் நிறைவு பெறும். பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு ஜூலை 24ம் தேதி தொடங்கி, ஜூலை 30ம் தேதியுடன் முடிவடைகிறது.இதுகுறித்து கோவை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கலந்தாய்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நிறைவு பெற்றுவிட்டன. மாவட்ட கல்வி அலுவலகங்களில் இட வசதி இல்லாததால், கலந்தாய்வை பள்ளிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த பள்ளிகளில் கலந்தாய்வு நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை