மேலும் செய்திகள்
தினசரி மார்க்கெட்டில் வாழை வரத்து குறைவு
17-Jan-2025
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், வாழைத்தார் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், நேற்று நேந்திரன் கிலோ - 35, ரஸ்தாலி --- 42, பூவன் --- 35, கதளி --- 35, சாம்பிராணி வகை வாழைத்தார் --- 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது.கடந்த, 10 நாட்களுக்கு முன் இருந்ததை விட தற்போது ரஸ்தாளி வாழைத்தார் ஒரு கிலோவுக்கு 3 ரூபாய் விலை குறைந்துள்ளது. கதளி 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில் நேற்று வாழைத்தார் வரத்து குறைவாகவே இருந்தது. குறிப்பாக, செவ்வாழை வரத்து இல்லை. மேலும், இந்த மாதம் முழுவதும் வரத்து குறைவாக இருக்கும். அடுத்த மாதம் முதல் வாழைத்தார் வரத்து அதிகரிக்கலாம்,' என்றனர்.விவசாயிகள் கூறியதாவது:கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், செவ்வாழை, நேந்திரன், பூவன், கதளி ரக வாழை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நீர் பாசன வசதி உள்ள விளை நிலங்களில், தனிப்பயிராகவும், தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகவும் வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நன்கு திரண்டு இருந்த வாழைத்தார்கள் அறுவடை செய்யப்பட்டது. அதனால், இந்தவாரம் வாழைத்தார் அறுவடை மந்தமாக உள்ளது.மேலும், வாழையில் வெள்ளை ஈ தாக்கம் அதிகம் உள்ளது. அதனால், வாழைத்தார் திரண்டு வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. பனி காலம் முடிந்தால் தான், வெள்ளை ஈ தாக்கம் குறையும்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
17-Jan-2025