மான்கள் விரைவில் டிஸ்சார்ஜ்
மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் உள்ள வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் 2 பெண் புள்ளி மான்கள் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளது. கோவை வனக்கோட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து கடந்த மாதம் வெளியேறிய 2 வயது மற்றும் 4 வயது பெண் புள்ளி மான்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு, சிறுமுகை பெத்திக்குட்டையில், உள்ள வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர் வாயிலாக தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பிற்காக தாவர உண்ணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இந்த மான்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இரு மான்களும் தற்போது நலமுடன் உள்ளதால், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வனப்பகுதியில் விடுவிக்கப்பட உள்ளன. ---- ---