உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நெல் கொள்முதல் தாமதம்; பா.ஜ. ஆர்ப்பாட்டம்

நெல் கொள்முதல் தாமதம்; பா.ஜ. ஆர்ப்பாட்டம்

பாலக்காடு: அரசு நெல் கொள்முதல் செய்ய தாமதிப்பதை கண்டித்து, பா.ஜ.,வின் விவசாயிகளின் அமைப்பான 'கர்ஷக மோர்ச்சா' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. கேரள மாநிலம், பாலக்காடு கலெக்டர் அலுவலகம் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தை பா.ஜ., மாநிலத் துணைத் தலைவர் கிருஷ்ணகுமார் துவக்கி வைத்தார். 'கர்ஷக மோர்ச்சா' அமைப்பின் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். அமைப்பின் மாவட்டத் தலைவர்களான வேணு, அம்புஜாக் ஷன், உன்னிகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நெல் கொள்முதலை தாமதிக்காமல் உடனடியாக துவங்க வேண்டும், விவசாயிகளுக்கு கட்டுபடியான ஆதார விலை கொடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர். நெற்கதிர்களுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை